’எங்களிடம் 5 வருடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்’..! ’இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்’..! அன்புமணி

தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 34ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ”மற்ற கட்சிகள் எல்லாம் யாரோ துவங்கி, தற்போது வழி நடத்தி வருகிறார்கள். ஆனால் பாமக, மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்டு இன்றும் வழிநடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? தமிழகத்தை ஆளும் தகுதி உடைய ஒரே கட்சி பாமக தான். இந்தியாவிலேயே நீட் தேர்வுக்காக அதிக குழந்தைகள் தற்கொலை செய்துள்ள மாநிலம் தமிழகம் தான். இவர்களது மன நிலையை புரிந்து கொள்ளாத மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தான் ஆட்சியாளர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

’எங்களிடம் 5 வருடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்’..! ’இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்’..! அன்புமணி

ஒவ்வொரு நாளும் டிவியைப் பார்க்கும் போது பதறுவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் போட்டி போட முடியாததற்கு காரணம் இந்த 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட ஆட்சி தான் என்றார். 5 ஆண்டு காலம் எங்கள் கையில் ஆட்சியை கொடுத்து பாருங்கள், வெறும் 5 ஆண்டு காலம். நாங்கள் என்னென்ன மாற்றங்களை கொண்டு வருகிறோம் என பாருங்கள் என்றார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பான காலத்தில் தமிழ்நாட்டில் மொத்தத்தில் 70 முதல் 80 பள்ளிக்கூடங்கள் தான் இருந்தது. திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அதன் பிறகு அத்தனையும் தனியார் பள்ளிகள் தான். பாட்டாளி மாடல் என்றால் இலவச, கட்டாய, தரமான கல்வி. எங்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை கொடுத்து பாருங்கள் நாங்கள் இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்.

’எங்களிடம் 5 வருடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்’..! ’இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்’..! அன்புமணி

பொறியியல், மருத்துவம் என அனைத்திற்கும் நீங்கள் ஒரு பைசா கூட கட்டணமாகவோ, நன்கொடையாகவோ கட்ட வேண்டாம். முற்றிலும் இலவசம் என்பதை நாங்கள் செய்து காட்டுகிறோம் உங்களுக்கு பாட்டாளி மாடல் வேண்டுமா? திராவிட மாடல் வேண்டுமா? இன்று சுகாதாரம் என்று சொன்னாலே தமிழ்நாடு மட்டும் அல்ல அனைவருக்கும் தெரியும் பாமக தான். டெல்லியில் நான் 5 ஆண்டுகள் இருந்தேன். இன்றும் டெல்லியில் போய் கேளுங்கள், மருத்துவ துறை என்றாலே அன்புமணி என்ற பெயரை தான் சொல்வார்கள் மத்தியில் இருந்த அமைச்சர்களின் தரவரிசையை பார்க்கும் போது, நம்பர் ஒன் அன்புமணி ராமதாஸ், நம்பர் 2 ப.சிதம்பரம், நம்பர் 3 பாமக-வின் அரங்கவேலு என தெரிவித்தார்.

’எங்களிடம் 5 வருடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்’..! ’இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்’..! அன்புமணி

நான் ஒரு வீடியோ பார்த்தேன், தருமபுரியில் பூஜை போட்டு கொண்டிருந்த போது, ஒரு நபர் இது திராவிட மாடல், எனவே பூஜை போட கூடாது என சொல்கிறார். திராவிட மாடலில் பூஜை போட கூடாதா? தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுத்த போதெல்லாம் வணக்கம் வைக்கிறீர்கள், அப்போது திராவிட மாடல் இல்லையா? தமிழகத்தில் மத ரீதியாக, இனம் ரீதியாக மற்ற கட்சிகள் எல்லாம் மக்களை பிரித்து கொண்டிருக்கும் பொழுது, பாமக மக்களை இணைத்துக் கொண்டு இருக்கிறது”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

ஆன்லைன் சூதாட்டம்..! மக்களை திரட்டி போராட்டம்..! எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

Sun Jul 17 , 2022
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால், திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது. திமுக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடாமல் இருந்ததால், தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் குழு அறிக்கை அளித்த […]
ஆன்லைன் சூதாட்டம்..! மக்களை திரட்டி போராட்டம்..! எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

You May Like