வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உள்ள இந்துக் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை மாவட்டநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இதில் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.
மசூதிக்குள் ஆய்வு நடத்தப்பட்டு இது பற்றி விசாரிக்க நீதிமன்றம் குழு அமைத்திருந்தது. அப்போது மசூதியின் நுழைவாயில் அமைந்துள்ள நீர் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக அந்தக்குழு தெரிவித்தது பெரிய சர்ச்சையானது.

இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , மாவட்ட நீதிமன்றம் இதை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என கூறி மனுவை தள்ளி வைத்தது. இன்று இது குறித்த விசாரணை வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது எனக் கூறி மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது. மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்ற நீதிபதிகள் , இரு தரப்பு விவாதங்களையு்ம கேட்டறிந்தனர். இந்நிலையில் இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உரியது என கூறியது. முன்னதாக இன்று விசாரணையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது