fbpx

பரபரப்பு.. அண்ணா பல்கலை., சேர்ந்த மேலும் ஒரு மாணவிக்கு ஞானசேகரன் பாலியல் தொல்லை..!! – போலீஸ் விசாரணையில் அம்பலம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் (டிச.24) பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஞானசேகரன் (37) என்ற நபரை நேற்று (டிச.25) அதிரடியாக கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு ஞானசேகரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணையில், ஞானசேகரன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இதேபோன்று 2011ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைதானதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலை கழகத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இரவு நேரங்களில் பல்கலைகழக மதில் சுவரை ஏறி குதித்து பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்களை ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். மொத்தம் எத்தனை பெண்கள் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; வந்தாச்சு QR Code..!! இனி நீங்கள் வாங்கும் மருந்து, மாத்திரைகள் போலியானதா என்பதை ஈசியா கண்டுபிடிக்கலாம்..!!

English Summary

Gnanasekaran sexually harassed another student of Anna University, it was revealed in the investigation..

Next Post

அண்ணா பல்கலை., வளாகத்தில் CCTV ஒயர் வொர்க் ஆகலனு சொல்ல வெக்கமா இல்லையா..? - திமுக ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை சூளுரை

Thu Dec 26 , 2024
Are you proud to say that there is CCTV wire work in the campus of Anna University..? - Annamalai rally against DMK regime

You May Like