fbpx

‘இனி எப்படியோ போங்க’..!! முடிவுக்கு வந்த ADMK – BJP கூட்டணி பேச்சுவார்த்தை..!!

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி அமைத்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக கூட்டணி முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக தலைவர்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி செய்து வந்தது. அதிமுகவுடனான கூட்டணிக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித் ஷா தெரிவித்திருந்தார். மேலும், அதிமுகவுடனான கூட்டணிக்கு கதவுகள் மட்டுமல்ல ஜன்னல்களும் திறந்தே இருக்கின்றன என அண்ணாமலை, தனது என் மண் என் மக்கள் பயணத்தின் போது தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லை. இந்நிலையில், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இழுபறி காரணமாக அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக கூறப்படுகிறது.

Read More : Vijay TVK | 2026 முதல்வர் பதவி உறுதி..? நடிகர் விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராகும் பிரஷாந்த் கிஷோர்..!!

Chella

Next Post

SCAM| பால் சந்தாவை நிறுத்தச் சென்றவருக்கு ஷாக்.. ரூ.99,000/- ஆட்டையை போட்ட ஆன்லைன் திருடர்கள்.!

Thu Feb 22 , 2024
பெங்களூரில், 68 வயது முதியவர், ஆன்லைன் மளிகை கடையில் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். நான் சில நாட்களுக்கு வெளியூர் செல்வதால் பால் வாங்குவதற்கான சந்தாவை நிறுத்த முயன்ற போது, ஒரு மர்ம நபரிடம் ரூ.99 ஆயிரத்தை இழந்திருக்கிறார். இந்த SCAM குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 68 வயது முதியவர், கடந்த மூன்று […]

You May Like