fbpx

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல!. இன்றுமுதல் 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!. உதவி எண்கள் இதோ!

Special Buses: தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 28-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பேருந்துகள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து எந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்கிற விவரத்தையும் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரத்தில் இருந்து ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் புகார்களைத் தெரிவிக்கவும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு 7845700557, 7845727920, 78457 40924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேருந்து விவரங்களை அறியலாம். அரசு பேருந்துகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க 9445014436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 044 2474900, 26280445, 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: சிறு குழந்தைகளுக்கு ஏன் ஆட்டிசம் ஏற்படுகிறது?. அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

English Summary

Go to hometown for Diwali! 14,000 special buses to run from today! Here are the help numbers!

Kokila

Next Post

விஜய்யின் முதல் மாநாட்டில் மனைவி சங்கீதா எங்கே..? அப்படினா அந்த விஷயம் உண்மையா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Mon Oct 28 , 2024
While Vijay's wife Sangeeta and son and daughter were expected to attend the conference, none of them turned up.

You May Like