fbpx

பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் ’GOAT’..!! இரண்டே நாளில் ரூ.200 கோடியை தாண்டிய வசூல்..?

கோலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த கோட் திரைப்படம், செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட மேலும் பலர் நடித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கோட் படம் ரிலீஸானதால், முதல் வாரம் முழுவதும் டிக்கெட் புக்கிங் களை கட்டியது. செப் 5ஆம் தேதியான வியாழன், வெள்ளி (நேற்று), சனி (இன்று), ஞாயிறு (நாளை) ஆகிய தினங்களில் கோட் படத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக புக் ஆகியுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உட்பட வட இந்திய மாநிலங்களிலும் கோட் வெளியானது.

கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ.126 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், கோட் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்கள் முடிவில் கோட் படத்தின் வசூல் 200 கோடியை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 210 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தெரிகிறது.

Read More : நான் அப்படி என்ன சொல்லிட்டேன்..!! எதுக்கு ஓடி ஒளிய வேண்டும்..!! நேர்ல வந்து பேசிக்குறேன்..!! மகா விஷ்ணு வெளியிட்ட வீடியோ..!!

English Summary

The highly awaited film Code, released by Kollywood fans on 5th September.

Chella

Next Post

Ghost Jobs | இளைஞர்களை பாதிக்கும் போலி வேலை விளம்பரங்கள்..!! தீர்வு தான் என்ன?

Sat Sep 7 , 2024
No, that job isn’t real. The rapid rise of ghost jobs and how to avoid them

You May Like