கோபி மஞ்சூரியன் 1975ல் அறிமுகமாகி நாடு முழுவதும் பலரது விருப்ப உணவுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. வேகவைத்த காலிஃபிளவரை சோளமாவு மற்றும் அரிசிமாவில் கலந்து, எண்ணெயில் மொறுமொறுவென வறுத்து, ஒரு கிரேவி போன்று பரிமாறப்படும் கோபி மஞ்சூரியனுக்கு ரசிகர்கள் ஏராளம்
இந்நிலையில் கோபி மஞ்சூரியில் சேர்க்கப்படும் மசாலாக்களும், செயற்கை நிறங்களும் உயிருக்கு ஆபத்தானவை என புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து நடந்த ஆய்வில் சோப்புக்கொட்டை பொடி பயன்படுத்தப்படுவதாகவும், தரமற்ற சாஸ் வகைகளை பயன்படுத்துவதும் தெரியவந்ததால் இந்த கோபி மஞ்சூரியனுக்கு கோவாவின் மபுசா நகராட்சி தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் பஞ்சு மிட்டாயில் ஆபத்து விளைவிக்கும் ரோடமைன்-பி நிறமூட்டி கலந்திருப்பது கண்டுபிடிக்கபட்டதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டதை, தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, தந்தூரி மற்றும் இனிப்பு வகைகளில் ரோடமையன்-பி ரசாயனம் கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
தற்போது கோபி மஞ்சூரியனுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் தடை விதிக்கப்படலாம் என கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இருக்காது என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தடை இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க்கப்படவேண்டிய அவசையமைல்லை என்வும், கர்நாடகாவில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடையில்லை ஆனால் தமிழ்நாட்டில் அவைகளுக்கு தடை உள்ளது என தெரிவித்துள்ளார்.