உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவதால், கர்நாடகாவில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நவீன உலகில் நாம் சாப்பிடும் பல உணவுகள் நச்சுத்தன்மை நிறைந்ததாக மாறி வருகிறது. ஆனால், அதன் டேஸ்ட் சூப்பராக இருப்பதால், நச்சுத்தன்மையை மறந்து பலரும் அதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகப் பஞ்சு மிட்டாய் உள்ளது. இருப்பினும், பஞ்சு மிட்டாயில் உடலுக்கு ஆபத்தான நிறமிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே, கர்நாடக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவது உறுதியானதால் கர்நாடகாவில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோடமைன்-பி என்ற நிறமிக்கும் முழுமையாகத் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் என இரண்டையும் பலரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாகப் பஞ்சு மிட்டாய் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் இந்த இரண்டிற்கும் கர்நாடகா மொத்தமாகத் தடை விதித்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் தான் தமிழ்நாடு அரசு பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்திருந்தது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி கலந்திருப்பதால், பஞ்சு மிட்டாய் மற்றும் இந்த நிறமியைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
அதேபோல வடக்கு கோவாவில் சாலையோரக் கடைகளில் ‘கோபி மஞ்சூரியன்’ விற்கத் தடை விதிக்கப்பட்டது. ‘கோபி மஞ்சூரியன்’ தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் குறித்து கவலை எழுப்பிய மபுசா நகரின் நகராட்சி கவுன்சில் தெரு கடைகள் சுகாதாரமற்ற முறையில் கோபி மஞ்சூரியன் செய்வதால், அவர்கள் கோபி மஞ்சூரியன் விற்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Read More : Vijay | பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் ’மாஸ்டர்’ பட காட்சிகள்..!! அதிர்ச்சியில் மாணவர்கள்..!!