Vijay | பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் ’மாஸ்டர்’ பட காட்சிகள்..!! அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு பக்கங்கள் துவங்கப்பட்டு, அதில் அரசின் நலத் திட்டங்கள், சாதனை மாணவ – மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், ஆசிரியர்களின் வீடியோ உள்ளிட்டவை நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம், சில மர்மநபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் காட்சிகள், தனித்தனி வீடியோவாக இந்தி மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Read More : Ponmudi | பொன்முடி வழக்கு..!! ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Chella

Next Post

Gobi Manchurian | தமிழ்நாட்டை தொடர்ந்து இந்த மாநிலத்திலுமா..? பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு அதிரடி தடை..!!

Mon Mar 11 , 2024
உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவதால், கர்நாடகாவில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நவீன உலகில் நாம் சாப்பிடும் பல உணவுகள் நச்சுத்தன்மை நிறைந்ததாக மாறி வருகிறது. ஆனால், அதன் டேஸ்ட் சூப்பராக இருப்பதால், நச்சுத்தன்மையை மறந்து பலரும் அதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகப் பஞ்சு […]

You May Like