fbpx

கோகுல்ராஜ் கொலை வழக்கு..! 5 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு..! விசாரணைக்கு ஏற்பு..!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கோகுல்ராஜ் தாயார் சித்ரா உயர்நீதிமன்ற கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் நிலையில், அதனை ஏற்று மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கூறியிருந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு..! 5 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு..! விசாரணைக்கு ஏற்பு..!

இதேபோல, கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசாரித்தனர். அப்போது, கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றும், அவற்றை அவை தொடர்பான வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிடவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

சூப்பர் அறிவிப்பு... விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு.. சொந்த ஊருக்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள்...! அமைச்சர் தகவல்...!

Wed Aug 31 , 2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி கல்லூரி என அனைவருக்கும் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது‌. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வரும் விதமாக அரசு சார்பில் சிறப்பு போக்குவர த்து பேருந்து […]
வரும் 15ஆம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!

You May Like