fbpx

கோகுல்ராஜ் கொலை வழக்கு..! தாயாரின் மேல்முறையீட்டு மனு ஏற்பு..! சிபிசிஐடியின் மனு ஒத்திவைப்பு..!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற கிளை, சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது, கோகுல்ராஜ் தாயார் சித்ரா தாக்கல் செய்திருந்த மனுவில், ”எனது மகன் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 10 நபர்களை குற்றவாளிகளாக
அறிவித்து தண்டனை வழங்கியது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு..! தாயாரின் மேல்முறையீட்டு மனு ஏற்பு..! சிபிசிஐடியின் மனு ஒத்திவைப்பு..!

அதே சமயம் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த விசாரணையின் போது விடுதலை செய்த 5 பேருக்கும் குற்ற சம்பவத்தில் தொடர்பு இருப்பதை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஆகவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் நிலையில், அதனை ஏற்று மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்” என கூறியிருந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு..! தாயாரின் மேல்முறையீட்டு மனு ஏற்பு..! சிபிசிஐடியின் மனு ஒத்திவைப்பு..!

இதே போல கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, கோகுல் ராஜின் தாயாரின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றும் சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chella

Next Post

இந்த திட்டத்தில் தினமும் ரூ.238 முதலீடு செய்தால் லட்சாதிபதியாகலாம்.. விவரம் உள்ளே...

Tue Aug 16 , 2022
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐச்.சி (LIC) நாடு முழுவதும் உள்ள பாலிசிதாரர்களுக்கு பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக ஓய்வூதியம் அல்லது குழந்தைகளின் திருமணத்திற்கு உதவும் வகையில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன… அத்தகைய பிரபலமான எல்ஐசி திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜீவன் லப் பாலிசி. இந்த காப்பீட்டுத் திட்டம் பிப்ரவரி 1, 2020 அன்று எல்ஐசியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பாலிதாரரர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், […]

You May Like