சென்னை ஏர்போர்ட்டில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் இரண்டு கிலோ தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அந்த ஒப்பந்த தொழிலாலியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப்பை பார்த்து சந்தேகமடைந்த சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர், மாப்பின் கைப்பிடிக்குழாயை கழட்டி காட்ட சொல்லி சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கைப்பிடிக்குழாய்க்குள் 78 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 811 கிராம் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த தூய்மை பணியாளரிடம் விசாரணை செய்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள், அவரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வெளிநாட்டிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க பசையை, அந்த ஊழியர் வெளியே கொண்டு செல்ல மாப்பின் கைபிடியில் மறைத்து வைத்திருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த தூய்மை பணியாற்றினாரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஒப்பந்த தொழிலாளியின் மாப்பின் கைப்பிடியை சி.ஐ.எஸ்.எப் வீரர் கழட்ட சொல்லி சோதனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.