fbpx

பெண்களே நற்செய்தி.. தங்கம் விலை ரூ.160 குறைவு…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூரூ.20 குறைந்து ரூ.4,795-க்கு விற்பனையாகிறது… இதனால் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து ரூ.63.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

’வன்முறைகளை மத்திய அரசு சமரசமின்றி எதிர்கிறது’..! ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Mon Aug 1 , 2022
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வன்முறையை சமரசமின்றி எதிர்ப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தற்போதைய மத்திய அரசு, துப்பாக்கியை பயன்படுத்துபவர்களை துப்பாக்கி மூலமாகவே எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாருடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என தெரிவித்த ஆளுநர், சரணடைவதற்கான வாய்ப்பை மட்டுமே வழங்கி உள்ளதாகக் கூறினார். […]
’தமிழ் மக்கள் போல் தமிழில் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’..! ஒருநாள் தமிழில் பேசுவேன்..! ஆளுநர்

You May Like