fbpx

குட்நியூஸ்.. 3 நாட்களில் ரூ.520 குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,680-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,100-க்கு விற்பனையாகிறது..

இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

தினமும் 3 ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்... ஜியோவின் அசத்தல் திட்டங்கள்

Thu Sep 15 , 2022
ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற கால், டேட்டா நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், தினசரி 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களை வழங்குகிறது.. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் OTT நன்மைகளையும் வழங்குகின்றன. ஒவ்வொரு நாளும் 3ஜிபி டேட்டா பலன்களை வழங்கும் ஜியோ திட்டங்களின் பட்டியலை பார்க்கலாம். ரூ.419 திட்டம்: […]

You May Like