fbpx

ஒரே நாளில் ரூ.200 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,830-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

தமிழகத்தில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..

Thu Aug 25 , 2022
வரும் 1-ம் தேதி முதல் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிக்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.. அதன்படி தமிழகத்தில் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள […]

You May Like