fbpx

இன்று தங்கம் விலை மீண்டும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

காதல் திருமணம் செய்த மகளை கடத்திச் சென்று மறைத்து வைத்த பெற்றோர் அதிரடி கைது…..!

Mon Feb 20 , 2023
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கின்ற ஸ்ரீரங்க நாராயணபுரத்தைச் சார்ந்தவர்கள் தங்கராஜா, சுகந்தி தம்பதியினர் இவர்களுடைய மகன் முருகன் (24) டிப்ளமோ பட்டதாரியான இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்தம் நிறுவன மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வீட்டிற்கு அருகில் முருகேசன், பத்மா தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மகளான சுமிதா (19) என்ற இளம் பெண் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்த நிலையில் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like