fbpx

பெண்களுக்கு நற்செய்தி.. மீண்டும் குறைந்தது தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,500-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

அண்டை நாடுகளுக்கு நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்.. எல்லையில் கூட்ட நெரிசல்.. என்ன காரணம்..?

Sat Sep 24 , 2022
உக்ரைன் போரில் பங்கேற்க விரும்பாத ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி தொடங்கியது.. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷ்யாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் […]

You May Like