fbpx

நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. தங்கம் விலை மேலும் குறைவு.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு குறைந்து ரூ.70.90 விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,900க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

மார்ச் மாதம் 13ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…..! முதல்வர் வருகையால் உண்டான மாற்றம்…..!

Fri Feb 24 , 2023
முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டார். அங்கே கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று அதன் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தான் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி ஆய்வு நடத்துகிறார் […]

You May Like