fbpx

தங்கம் விலை இன்றும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,760-க்கு விற்பனையாகிறது….

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,720க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,760-க்கு விற்பனையாகிறது…. எனினும் இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 10 காசு குறைந்து ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

மாமியார் கொடுமையால் திருமணமான ஐந்தே மாதத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..! அதிரவைக்கும் ஆடியோ..!

Mon Jul 25 , 2022
வேளச்சேரியில் திருமணமான ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் இந்துமதி. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு வந்த இந்துமதியை குமரனின் தாயார் ராசி இல்லாதவள், அதிகம் படிக்கவில்லை என்று திட்டிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் […]

You May Like