fbpx

தங்கம் விலை இன்றும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.41,944க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,243க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.41,994க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து ரூ.70.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை…..! அவர்களை தடுப்பது எங்களுடைய நோக்கமல்ல மாவட்ட ஆட்சியர் விளக்கம்……!

Thu Mar 2 , 2023
கடந்த 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பாக தென்னரசுவும் போட்டியிட்டார்கள். இதை தவிர தேமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை களம் இறக்கி இருந்தார்கள். இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பமானது. 2 சுற்றுகள் நிறைவடைந்த […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? அப்படினா இதை பண்ணுங்க..!! தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

You May Like