fbpx

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 26) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,125-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Read More : ஷாக்கில் ரிப்போர்ட்..!! மதுரையில் ரேபிஸ் நோயால் 32 பேர் உயிரிழப்பு..!! 5 ஆண்டுகளில் 1,33,523 பேருக்கு சிகிச்சை..!!

English Summary

In Chennai today (December 26), the price of gold jewelry rose by Rs. 200 per sovereign, selling at Rs. 57,000 per sovereign, and by Rs. 25 per gram, selling at Rs. 7,125 per gram.

Chella

Next Post

முதல் திருமணத்தை மறைத்து இன்ஸ்டா காதலியுடன் உல்லாசம்..!! வலையில் சிக்கிய கோவை பெண்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Thu Dec 26 , 2024
At one point, Arun Prakash, enraged, snatched and broke the young woman's cell phone and threatened her with an iron rod.

You May Like