fbpx

இன்று மீண்டும் எகிறிய தங்கம் விலை..!! தொடர் உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 27) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும், ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : மன்மோகன் சிங் மறைவு..!! அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

English Summary

In Chennai today (December 27), the price of gold jewelry rose by Rs. 200 per sovereign, selling at Rs. 57,200 per sovereign, and one gram of gold rose by Rs. 25, selling at Rs. 7,150.

Chella

Next Post

புத்தாண்டுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!! மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..!! சம்பள உயர்வு..!!

Fri Dec 27 , 2024
It has been reported that an important announcement regarding salary increases for government employees will be made in January.

You May Like