fbpx

தங்கம் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் ஆடிப்போன நகைப்பிரியர்கள்..!!

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர் எதிர். இங்கு விற்கப்படும் 90 சதவீத தங்கம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். அவை டாலர் மதிப்பில் வாங்கப்படுவதால், தங்கம் விலையில் எப்போதும் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தைகள் அதிரடியாக சரிவை கண்டன. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பங்குச்சந்தையும் சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ’கவுண்டரில் வாங்கும் ரயில் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் மூலம் ரத்து செய்யலாம்’..!! ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு..!!

English Summary

In Chennai today (March 29), the price of gold jewelry rose by Rs. 20 per gram and is being sold at Rs. 8,360 per gram.

Chella

Next Post

ஐபிஎல் இறுதிப்போட்டியில் CSK vs RCB..!! பல வருட கனவு நிறைவேறப் போகுது..!! கோப்பையை வெல்லும் அணி இதுதான்..!! ஐஐடி பாபா கணிப்பு..!!

Sat Mar 29 , 2025
IIT Baba has predicted that RCB will win the IPL.

You May Like