மக்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தங்க நகை, உலக சந்தையில் உள்ள தேவை, உள்நாட்டுப் பொருளாதாரம், வட்டி விகிதம், நாணய மாற்று விகிதம் மற்றும் இறக்குமதி வரிகள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தே நாள்தோறும் ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர். சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது.
டிரம்ப் விதித்த வரி விதிப்பு, உக்ரைன் – ரஷ்யா போர், பல்வேறு நாடுகள் இடையே நீடிக்கும் போர்ப் பதற்றம் என தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மே 21 ஆம் தேதியான இன்று தங்கம் விலை உயர தொடங்கியது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.3000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கு விற்பனையாகிறது.
Read more: நடிகர் சூரி கரியரில் பெஸ்ட் படம் மாமன்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா..?