fbpx

Gold Rate..!! மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய இரண்டு நாட்களாக விற்பனை களைகட்டியது. மேலும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தும் இருந்தது. இதனால் நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.5,640-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,200-ஆக இருக்கிறது.

Chella

Next Post

ஆன்லைன் சூதாட்ட தடைசட்டம்….! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு….!

Thu Apr 27 , 2023
தமிழகத்தில் இணையதள சூதாட்டத்தில் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளது. ஆகவே இணையதள சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பினார் இத்தகைய நிலையில், திருத்தம் செய்யாமல் மறுபடியும் தமிழ்நாடு சட்டசபையில் இந்த சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆளுநர் ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஆகவே தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது […]

You May Like