fbpx

Gold Rate..!! தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடி குறைவு..!! நகைப்பிரியர்கள் நிம்மதி..!!

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 42,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 60 ரூபாய் குறைந்து 5,804 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தற்போது படிப்படியாக விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி இன்று 1 ரூபாய் குறைந்து 72.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 72,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

Chella

Next Post

பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 13 நாட்களுக்கு இந்த விரைவு ரயில்கள் ரத்து….! தெற்கு ரயில்வே அறிவிப்பு….!

Fri Feb 10 , 2023
சென்னை, எழும்பூர், காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் அதற்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு காரைக்குடி, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடையே 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன என்று தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 10.05 மணிக்கு […]

You May Like