fbpx

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு…..! கடத்தி வரப்பட்ட 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்…..!

இலங்கையிலிருந்து தங்கம் வரப்படுவதாக ராமநாதபுரம் சுங்கவரித்துறையினருக்கு தகவல்களைத்தது அதன் பெயரில் கடந்த 5ம் தேதி சுங்கவரித்துறையினர் படகு ரோந்துக்கு சென்றனர். அப்போது முயல் தீவு அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் சென்ற மீன்பிடி படகை விரட்டி சென்றனர்.

அப்போது உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற் பகுதி பாறையில் படகு மோதியதும் படகை விட்டு, விட்டு அந்த படகில் இருந்தவர்கள் தப்பி சென்றனர் படகுடன் தங்க கட்டிகளை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல் காரர்கள் ஒரு பகுதி தங்கத்தை கடலில் வீசியதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து குளிக்கும் மீனவர்கள், கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலமாக கடந்த 6 மற்றும் 7 உள்ளிட்ட தேதிகளில் நொச்சி ஊரணி கடற் பகுதியில் தேர்தல் வேட்டை நடைபெற்றது.

ஆனால் தங்கம் எதுவும் கிடைக்காததால், தேடுதல் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. பின்னர் நொச்சியூரணி கடற்கரைக்கு கடந்த 5ம் தேதி கடத்தி வரப்பட்ட 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான 2.50 கிலோ எடை கொண்ட வெளிநாட்டு தங்க கட்டிகளை படகுடன் பறிமுதல் செய்ததாகவும் கடத்தல் காரர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுங்கவரித்துறையினர் கூறியுள்ளனர்.

Next Post

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! B.E முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Fri Jun 9 , 2023
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30-ம் […]

You May Like