தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மேலும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. இந்த நிலையில் வெயிலில் இருந்து சற்று ரிலாஸ்க் பண்ணுவிதமாக வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக மே 8-ஆம்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் மே 9-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Read More: என்னது அதானி குழுமம் சொத்துக்களை விற்பனை செய்கிறதா? வாங்குவது யார் தெரியுமா..?