fbpx

இந்த நோய்களுக்கான மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம்.. விரைவில் அறிவிப்பு..

நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான முக்கியமான மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வர்த்தக வரம்பு பகுத்தறிவுக்கு உட்படுத்தப்பட உள்ள மருந்துகளின் பட்டியலில் உள்ள மருந்து உற்பத்தியாளர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சந்திப்பில் மருந்துகளின் விலை குறைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.. இந்த ஆலோசனைக்கு பிறகு வர்த்தக வரம்புகளின் திருத்தம் முக்கியமான மருந்துகளின் விலைகளைக் குறைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன… வர்த்தக விளிம்புகள் என்பது உற்பத்தியாளர்களுக்கு வர்த்தகம் செய்வதற்கான விலைக்கும் நோயாளிகளுக்கும் அதிகபட்ச சில்லறை விலையாகும்.

மேலும் சர்க்கரை நோய், இதயம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. விலை குறைப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று வெளியிடலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

சிதம்பரம் கோயில் நகை சரிபார்ப்பு ஆய்வை தள்ளி வைக்க வேண்டும்.. தீட்சிதர்கள் கோரிக்கை...

Thu Jul 21 , 2022
சிதம்பரம் கோயில் நகை சரிபார்ப்பு ஆய்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தீட்சிதர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்… புகழ்பெற்ற சிதம்ரம் நடராஜர் கோயில் தற்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.. இந்நிலையில் இந்த கோயில் சட்ட விதிகளின் படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது.. அதன்படி கடந்த ஜூன் மாதம் 7 மற்றும் 8ஆம் […]

You May Like