fbpx

குட்நியூஸ்.. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்..

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21-ல் 5.58 சதவீதமாக குறைந்தது.. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது..” என்று தெரிவித்தார்..

2023-24 தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் :

  • முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்காக 5,145 கி.மீ சாலைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்
  • ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 80,567 ஹெக்டேர் பரப்பில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்
  • கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம் உருவாக்கப்படும்.
  • சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட நகரப்புற வசதிகள் கொண்டு வரப்படும்..
  • 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் இந்த வரவு செலவு திட்டத்தில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திற்கு 2,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை தேனாம்பேட்ட முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்..
  • சென்னை கூவம், அடையாறு நீர்வழித்தடங்களில் ரூ.1,500 கோடியில் மறுசீரமைப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்.
  • அடையாற்றில் பூங்கா, பசுமை நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் போன்றவை அமைக்க ரு.1,500 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் பேருந்து பணிமனைகளை தரம் உயர்த்த ரூ.1,600 கோடி ஒதுக்கீடு
  • மதுரையில் மெட்ரோ ரயில் ரயில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • கோவையில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையம் ரூ.120 கோடியில் அமைக்கப்படும்..
  • 211 தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ‘ மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ விரிவுப்படுத்தப்படும்

Maha

Next Post

1500 கோடி ரூபாய் செலவில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும்…..! பட்ஜெட் உரையில் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்த நிதியமைச்சர்….!

Mon Mar 20 , 2023
தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2023- 24 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார். கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் டிஜிட்டல் நிதிநிலை அடிக்கடி வருகிறது அதன்படி இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையிலான நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றிய நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் […]

You May Like