fbpx

குட் நியூஸ்..!! மின் கட்டணம் குறைகிறதா..? முதலமைச்சருடன் அமைச்சர் அவசர ஆலோசனை..!!

மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறுகையில், ”மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

மின்கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மின்கட்டண முறைகளை மாற்றி அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மின்வாரியம் நஷ்டத்தில் இருப்பதால், பாதிப்பு இல்லாத வகையில், மின் கட்டண குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

கள்ளச்சாராயத்தால், பறிபோன உயிர்....! அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்....!

Mon Sep 25 , 2023
நாடு முழுவதும் இந்த மது என்ற அரக்கன் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தாலும், இன்னொரு புறம் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற பயத்தில், மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த சற்றே தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தில், […]
கள்ளச்சாராயத்தால் பறிபோன உயிர்கள்..!! மெத்தனால் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துமா..?

You May Like