fbpx

மதுபிரியர்களுக்கு குட் நியூஸ்..! இனி வீடு தேடி வரும்..! புதிய அறிவிப்பு…!

பீர் மற்றும் ஒயினை ஹோம் டெலிவரி செய்ய ஸ்விக்கி, சொமேட்டோ உணவு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது பொதுமக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகின்றன. இதனால், இந்நிறுவனங்கள் தற்போது பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இதையடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

read more..அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? தவறுதலா கூட இத செய்யாதீங்க!! பணம் போயிடும்..

English Summary

Good news for alcohol lovers..! Will come looking for a house now..! New announcement…!

Next Post

காதில் கட்டுடன் டொனால்ட் டிரம்ப்!. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குபின் மீண்டும் பிரச்சாரம்!.

Wed Jul 17 , 2024
Donald Trump with ear bandage!. Campaign again after the shooting incident!

You May Like