fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டது.இம்மாத இறுதிக்குள் இது பற்றிமுடிவு செய்யப்பட உள்ளது. ஒருவேளை முடிவெடுக்கப்படும் பச்சத்தில் 52 லட்சம் ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் உயரும். தற்போது 2.57 சதவீதமாக உள்ள ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால் 3.48 சதவீதமாக இருக்கும் உதாரணமாக குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000 பெறும் ஊழியர்களின் சம்பளம் ரூ.26000 ஆக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் காரணி முக்கிய பங்கு வகிக்கிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர ஃபிட்மென்ட் காரணி மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்குக்கும் மேல் உயர்த்தும் காரணி என்பது குறிப்பிடத்தக்கது.

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆகும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது, ​​அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, பயணப்பட, வீட்டு வாடகை கொடுப்பனவு  ஆகியவை 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் காரணி 2.57-ஐப் பெருக்கி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக, ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 ஆக இருந்தால், அலவன்ஸ்கள் தவிர்த்து அவருடைய சம்பளம் 18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். இதை 3 ஆக எடுத்துக் கொண்டால் சம்பளம் 26000X3 = ரூ.78,000 ஆக இருக்கும். ஊழியர்களுக்கு இதில் பம்பர் பலன் கிடைக்கும்.

Next Post

மெகா அறிவிப்பு...! அரசு கல்லூரிகளில் 4,000 பேராசிரியர் பணியிடங்கள்...! தமிழக அரசு அரசாணை ...

Wed Nov 9 , 2022
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்து […]

You May Like