fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரப்போகும் இனிப்பான செய்தி..!! சம்பளம் இவ்வளவு உயரப்போகிறதா..?

மத்திய அரசு பணியாளர்களுக்கான டிஏ உயர்வு அதாவது அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்று என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

நாட்டில் தற்போது பணவீக்கம் 4% மேல் உள்ளது. அதாவது ஒரு பொருள் 1 ரூபாய்க்கு விற்கிறது என்றால் போக போக அதன் விலை 4 சதவிகிதம் வரை உயரும். அடுத்த வருடம் பெரும்பாலும் அந்த பொருளின் விலை 4 ரூபாயாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால், பொருட்களின் விலை உயரும். அகவிலைப்படி உயர உயர சம்பளம் உயர வேண்டும். பொதுவாக பணவீக்கம் எவ்வளவு இருக்கிறதோ அதை அடிப்படியாக வைத்தே ஹைக் இருக்கும். அதாவது பணவீக்கம் 5% என்றால் பெரும்பாலும் ஹைக்கும் 5% இருக்கும். அப்படி உயர்ந்தால் மட்டுமே மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பொருட்களை வாங்க முடியும்.

இந்த விலை உயர்வை சமாளிக்க தனியார் ஊழியர்களுக்கு வருடா வருடம் ஹைக் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில், இந்த வருடம் எவ்வளவு அகவிலைப்படி உயரும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, 4% வரை அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. தற்போது 42% வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி இன்னும் சில நாட்களில் 4 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது 46% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் 26 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் வாங்கும் நபர்களுக்கு 11,960 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும். தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதாவது உங்கள் அடிப்படை வருமானம் 29,200 ரூபாய் என்னும் பட்சத்தில், DA கணக்கீடு பின்வருமாறு செய்ய முடியும்: (42 x 29200) / 100 = 12,264. உங்கள் அடிப்படை வருமானம் 29ம்200 ஆக இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் DA தொகை ரூ. 12,264 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. கடந்த மாதமும் இதே அளவு புள்ளிகள் உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் தற்போது 136.2 ஆக உயர்ந்துள்ளது. இனிமேல்தான் இந்த மாதத்திற்கான புள்ளிகள் வர வேண்டும். அதை வைத்தே அகவிலைப்படி உயர்வு இருக்கும். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

சேர்ந்து வாழவும் முடியாது விவாகரத்து கொடுக்கவும் முடியாது….! கணவருக்கு சிறை தண்டனை சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி…..!

Wed Aug 2 , 2023
ஒருவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால் அவரிடமிருந்து விலகி செல்வதுதான் நியாயம். ஆனால் அப்படி விலகி செல்லவும் விருப்பம் இல்லாமல், சேர்ந்து வாழவும் விருப்பம் இல்லாமல் மனைவியை கொடுமைப்படுத்திய ஒரு கணவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதாவது, சிங்கப்பூர் நாட்டில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழாமல் ஒரு நபர், அந்த பெண்ணை விவாகரத்து செய்யவும் மறுத்து விட்டார். அத்துடன் அந்த நாட்டின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகளையும் மீறும்படியாக […]

You May Like