fbpx

Gold Rate | நகைப்பிரியர்களுக்கு செம குட் நியூஸ்..!! இதுதான் சரியான நேரம்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான்.

ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற இரக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றையே விலையின் படியே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ.9,005-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ஆவின் நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

In Chennai, the price of gold jewelry is being sold at the same price as yesterday, without any change.

Chella

Next Post

அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அரவக்குறிச்சி இளங்கோ..!! அமைச்சராக்க துடிக்கும் செந்தில் பாலாஜி..!! முதல்வரும் ஓகே சொல்லிட்டாராம்..!!

Sat Apr 26 , 2025
Senthil Balaji is said to have requested the Chief Minister to give the ministerial post to Aravakurichi Elango from Karur district.

You May Like