651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 6.73 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 2023 முதல், பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 12.12 சதவீதம் உயரும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மோடி அரசாங்கம் மருந்துகளில் உச்சவரம்பு விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது.. இதனால் அத்தியாவசிய மருந்துகளின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.. தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த 870 மருந்துகளில் இதுவரை 651 மருந்துகளின் உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்ய முடிந்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority – NPPA) தெரிவித்துள்ளது. அதன்படி, சராசரியாக 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏற்கனவே 16.62 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் நுகர்வோர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பெரும்பாலான அத்தியாவசிய மருந்துகளின் விலையை அரசு நிர்ணயிப்பதன் மூலம் நுகர்வோர் ஆண்டுக்கு சுமார் 3,500 கோடி ரூபாய் சேமிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்… நிறுவனம் விலையை முழுமையாக உயர்த்தினாலும், சராசரியாக 6.73 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய மருந்துகளின் உச்சவரம்பு விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..