சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போது மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு சலுகைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 3ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வடபழனி, திருமங்கலம், சென்ட்ரல் விம்கோநகர், நந்தனம், ஆகிய 5 ரயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை பயணிகள் பார்க்கலாம். பயணச்சீட்டுடன் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 10 கட்டணம் செலுத்தி எல்.இ.டி திரைகளில் ஐபிஎல் போட்டிகளை காணலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி நடைபெறும் நாள் அன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச பேருந்து மற்றும் ரயில் சேவை அதிகரிக்கப்படுவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.