fbpx

விவசாயிகளுக்கு குட்நியூஸ்: உரங்களுக்கான மானியம் அதிகரிப்பு..! ஒரு டன்னுக்கு ரூ.4,500 மானியம்…

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் உலகளவில் உயர்ந்த போதிலும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும் என உறுதி அளித்தார்.

இதுபோன்று, NKP உரம் ஒரு மூட்டை ரூ.1,470 என்ற விலையில் தொடர்ந்து கிடைக்கும் என கூறினார். பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு 2023-24 (01.10.2023 முதல் 31.03.2024 வரை) RABI பருவத்திற்கான மானியம் (NBS) விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நைட்ரஜன் உரம் ஒரு கிலோவுக்கு ரூ.47.2 ஆகவும், பாஸ்பரஸ் கிலோவுக்கு ரூ.20.82 ஆகவும், பொட்டாஷ் மானியம் கிலோவுக்கு ரூ.2.38 ஆகவும், கந்தக மானியம் ஒரு கிலோவுக்கு ரூ.1.89 ஆகவும் வழங்கப்படும் என்றும் டி.ஏ.பி உரத்துக்கு டன்னுக்கு ரூ.4,500 மானியம் வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Kokila

Next Post

ரயிலில் "General compartment" கடைசியில் இருப்பதற்கு காரணம் இதுதானா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….?

Thu Oct 26 , 2023
பொதுவாக மக்கள் ரயில் பயணத்தை அதிகமாக விரும்புவதற்கு காரணம் அந்த ரயில் பயணத்தின் போது ஏற்படும் பல் வேறு சுவாரசியமான அனுபவங்கள் மற்றும் பயண செலவு குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது போன்ற காரணங்களால் தான் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதிலும், தினமும் இந்த ரயில்களில் பயணம் செய்பவர்களின் அனுபவம் என்பது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். இந்த ரயில் […]

You May Like