fbpx

விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… நாளை வரவு வைக்கப்படும் ரூ.2000!… பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 15 ஆவது தவணைத் தொகையான ரூ.2000 நாளை (நவம்பர் 15) விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 கொடுக்கும், அதில் 15 ஆவது தவணைத்தொகை வெகுநாட்களாக தள்ளிப்போயிருந்த நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிசான் யோஜனாவின்கீழ் தகுதியான விவசாயிகளுக்கான15வது தவணைத் தொகை நாளை வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் என பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

PM-Kisan திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதிப் பலன் வழங்கப்படுகிறது, இது மூன்று சமமான தவணைகளில் 2,000 ரூபாயாக விவசாயிகளுக்கு கொடுக்கப்படும். தகுதியுள்ள சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (பிஎம்-கிசான்) 14வது தவணையை ஜூலை 27 அன்று பிரதமர் மோடி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், PM Kian திட்டத்தின் 14 வது தவணை பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்ட 13 வது தவணைக்குப் பிறகு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. கிடைத்த தரவுகளின்படி, PM-KISAN திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதுவரை மொத்தம் ரூ.2.50 லட்சம் கோடியை பயனாளிகள் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சரிபார்க்க, முதலில் நீங்கள் PM Kisan அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். பின்னர் ’farmers corner’ ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன்பின் தோன்றும் திரையில் உங்களிடம் கேட்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து, பின்னர் தோன்றும் பயனாளிகளின் பட்டியல் உங்கள் பெயரை எளிதாக சரிபார்க்க முடியும். உங்கள் அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால்தான் பணம் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Kokila

Next Post

25 வயது இளம்பெண்ணை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடூரன்கள்..!! இணையத்தில் லீக்கான அதிர்ச்சி வீடியோ..!!

Tue Nov 14 , 2023
உத்தரப்பிரதேசத்தில் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில் பணிபுரியும் 25 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசமாக தாக்கப்பட்டதாக உபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் பணிபுரிந்த ஹோம்ஸ்டேயில் கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆண்களில் ஒருவர்தான் […]

You May Like