தமிழ்நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களில் மட்டும் 5 முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஊதிய உயர்வு
முதற்கட்டமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புதிய ஊதிய உயர்வு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50% உயர்த்தி வழங்க முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இழப்பீடு தொகை உயர்வு
உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத விதமாக மரணமடையும் மற்றும் காயம் அடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியின் போது இறந்த அல்லது காயமடைந்த வாக்குச் சாவடி பணியாளர்கள்/ வாக்குச்சாவடி பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு கருணை இழப்பீடு வழங்குவதற்கான அரசாணையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் இருக்கும் போது அதிகாரி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தால், அதிகாரியின் அடுத்த உறவினருக்கு குறைந்தபட்ச தொகையாக இனி ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
அம்மா உணவக ஊழியர்களுக்கு குட் நியூஸ்
அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கியது சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய காப்பீடு முறை
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பல நாள் கோரிக்கைகளில் ஒன்று காப்பீட்டு முறையை மாற்றுவது. தற்போதைய காப்பீட்டை மாற்றி புதிய காப்பீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான் அரசாங்கத்திற்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! இதை கவனிச்சீங்களா..? விவசாயிகளுக்கும் குட் நியூஸ்..!!