fbpx

இல்லத்தரசிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி…..! நியாய விலை கடைகளில் மேலும் குறைக்கப்பட்ட தக்காளியின் விலை…..!

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் தற்போது மிகப் பெரிய பேசு பொருளாக மாறி இருப்பது தக்காளியின் விலை தான். ஆம் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் இல்லத்தரசிகள் மிகப்பெரிய கவலையில் இருக்கிறார்கள்.இந்த தக்காளியின் விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலும் , தக்காளியின் விலை குறைவதாக தெரியவில்லை.

ஆனால் தமிழக அரசு சார்பாக பசுமை பண்ணை கடைகளின் மூலமாக குறைந்த விலையில், தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே மிக விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் தக்காளியின் மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான், தக்காளி தமிழ்நாடு முழுவதிலும் ரூபாய் 180 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.. இந்த ஆலோசனையில் தக்காளியை தமிழக அரசு முழுவதுமாக கொள்முதல் செய்து, ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் வரையில் குறைத்து அனைத்து நியாய விலை கடைகளிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே இதற்கு முன்பே 302 நியாய விலை கடைகளில் குறிப்பிட்ட சமயத்தில் மட்டும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

திடீரென்று ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதி…..! இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை……!

Mon Jul 31 , 2023
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொருத்தவரையில், அவ்வப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து பல்வேறு அட்டூழியங்களை செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனாலும், இந்திய ராணுவம் எத்தனை முறை அவர்கள் ஊடுருவினாலும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, ஜம்மு காஷ்மீரை தன் வசம் வைத்திருக்கிறது என்பதில் எந்த விதமான கேள்விக்கும் இடம் இல்லை. அந்த விதத்தில், ஜம்மு காஷ்மீரின் அர்னியா செக்டாரில் இருக்கின்ற சர்வதேச எல்லை பகுதியில் ஊடுருவ முயற்சி […]

You May Like