நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், “தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6% குறைக்கப்படும் என்றும் இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாமிரம் மற்றும் உருக்கு ஆகியவற்றின் வரிகளும் குறைக்கப்படும் என்றும் பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4% குறைக்கப்படும்” என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : BREAKING | வருமான வரிக்கான நிலையான கழிவு ரூ.75,000 ஆக உயர்வு..!! ஏஞ்சல் வரி முற்றிலும் அகற்றம்..!!