fbpx

செவிலியர்களுக்கு குட்நியூஸ்!… இன்னும் ஒருமாதத்தில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழகத்தில் ஒருமாத காலத்திற்குள் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என ஏறத்தாழ சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், வலைதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த மாநாடு தற்போது நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் மாநில அரசு நடத்தும் சர்வதேச மாநாடாக இது இருக்கும். இந்த மாநாடு எதிர்காலத்தில் பரவும் நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் பணிபுரிகின்ற 20,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பயனடைய இருக்கிறார்கள். 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், 2222 கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில், பணி நியமனங்கள் முறைப்படுத்தும் பணியை மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருமாத காலத்திற்குள் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என ஏறத்தாழ சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் முதலமைச்சரால் வழங்கப்படும் என்று கூறினார்.

Kokila

Next Post

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்புவர்களால் நோய் பரவும் அபாயம்!…

Sat Nov 18 , 2023
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளால் போலியோ உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் 7 லட்சம் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நுழைந்துள்ளனர். இவர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்க 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது. அதாவது, பாகிஸ்தானில் இருந்து 1.3 […]

You May Like