உலக அளவில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதால் நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த இணைய வழி பண பரிவர்த்தனைகளுக்கு பல செயலிகள் அடித்தளம் இட்டாலும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்தியாவில், பெரும்பாலானோர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், போன் பே பயனர்களுக்காக நல்ல செய்தி ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்குவோருக்கு Cash Back அறிவிக்கப்பட்டுள்ளது. போன் பே மூலம் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் 50 முதல் 500 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும். இந்த தங்கத்தினை போன் பே இலவசமாக லாக்கரில் சேமித்து வைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.