ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தி உள்ளது.
அதன்படி, சிறு சேமிப்பு தொகைக்கு 4% வட்டியும், ஒரு வருட டெபாசிட்டிற்கு 6.9%வட்டியும், இரண்டு வருட டைம் டெபாசிட்டிற்கு 7 சதவீத வட்டியும், மூன்று வருட டைம் டெபாசிட்டிற்கு 7% வட்டியும், 5 வருட டைம் டெபாசிட்டிற்கு 7.5% வட்டியும், 5 வருட ரெக்கரிங் டெபாசிட்டிற்கு 6.5% வட்டியும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வட்டி விகிதமும், மாத வருமானத் திட்டத்திற்கு 7.4% வட்டி வீதமும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7.7% வட்டி விகிதமும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1% வட்டியும், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு எட்டு சதவீதம் 8%வட்டி விகிதமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.