fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.. மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக வாங்கலாம்..

இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY நன்மைகள்) பணவீக்கம் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. நாட்டின் 80 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.

இந்த திட்டத்தின் காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மத்திய அரசு வழங்குகிறது..

இந்நிலையில் இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. வரும் 30-ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ள நிலையில் இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் ரேஷன் அட்டை தாரர்கள் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை இலவசமாக பெறலாம்..

Maha

Next Post

#RainAlert; விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை...! வானிலை மையம் தகவல்...!

Thu Sep 29 , 2022
வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி […]

You May Like