தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் நிலையில், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக ஈரோடு மற்றும் சேலத்தில் வழங்கப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.