fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க உத்தரவு..!!

நாடு முழுவதும் மாநில அரசுகளுக்கு வழங்கும் அரிசியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இலவசமாக ரேஷனில் அரிசி வழங்கி வந்த, மாநில அரசுகள் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், கேரளா அரசு ரேஷன் கடைகளில் வெள்ளை அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் இரண்டு கிலோ அரிசியுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க இருப்பதாக அமைச்சர் ஜி.ஆர். அனில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, நீல அட்டைதாரர்களுக்கு கூடுதல் ரேஷனாக ரூ.10.90 வீதம் 5 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும், AAY கார்டுதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் மண்ணெண்ணெய் உடன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக அரை லிட்டர் சேர்த்து ஒரு லிட்டராக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10ஆம் தேதிக்குள் அனைத்துப் பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஓணம் மேளாவை முதலமைச்சர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார். அதன் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஊழியர்களுக்கு ரூ. 500 மற்றும் ரூ.1000 மதிப்பிலான இலவச கூப்பன்கள் வழங்கப்பட்டு பொது சந்தையை விட ரூ.5 விலை குறைவாக பொருட்கள் விற்பனை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

வேகமாக பரவும் "பிங்க் ஐ"- உங்கள் கண்கள் பத்திரங்கோ...

Sun Aug 6 , 2023
கண்களில் ஏற்படும் ஒருவிதமான பாதிப்பை ’பிங்க் ஐ’ என்று அழைக்கின்றனர். இது கண் இமைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சவ்வு பகுதி வீக்கமடையும் போது ஏற்படுகிறது. இது எளிதில் பரவக் கூடியது.இதை நம் ஊரில் ’மெட்ராஸ் ஐ’ என்று அழைப்பர். இது பெரும்பாலும் கோடைக் காலங்களில் தான் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது யாரும் எதிர்பாராத வண்ணம் கர்நாடகா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது. ஒரே வாரத்தில் 40,477 […]

You May Like