fbpx

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு பாரம்பரிய திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டார். வாமனர் முதல் அடியில் பூமியையும், 2ஆம் அடியில் வானத்தையும் அளந்தார்.

மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டுமென வரம் கேட்டார். அதனை ஏற்று வாமனர் அருள் புரிந்ததாக வரலாறு. அதன் அடிப்படையில், மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருநாளை திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. குறைந்த அளவு பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 2ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

Thu Aug 10 , 2023
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் காரணமாக இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு, […]

You May Like