fbpx

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! கிருஷ்ண ஜெயந்தி..!! தமிழ்நாட்டில் நாளை பொதுவிடுமுறை..!!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்தாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250-வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அவர் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கோகுலத்தில் தான். இதனால் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக பெரும்பாலானவர்கள் கொண்டாடினாலும், அவர் கோகுலத்திற்கு வந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி நாள் என்று யாதவ குலத்தினரும் கொண்டாடும் வழக்கம் உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை உள்ளிட்டவை கோலாகலமாக நடைபெறும்.

Chella

Next Post

”ரூ.10 கோடி போதாதுன்னா அதுக்கும் மேல தர்றேன்”..!! உதயநிதிக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த சாமியார்..!!

Tue Sep 5 , 2023
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என அயோத்தி சாமியார் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி […]

You May Like